வேலையில்லா பட்டதாரி 2 முதல் நாள் வசூல் நிலவரம்
Posted: Sat,12 Aug 2017 04:01:09 GMT
தனுஷ் நடிப்பில், சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் நேற்று வெளியாகி இருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி 2. இப்படம் நேற்று வெளியான படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியான படம் ஆகும்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்துக்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் மட்டும் முதல் நாளில் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள இப்படம் தமிழ்நாடு முழுவதுமாக சேர்த்து முதல் நாளில் மூன்று கோடியே 20 லட்சங்களை வசூல் செய்துள்ளது.
அதே போல் வெளிநாடுகளில் திரையிட்ட இடங்களிலும் முதல்நாளில் நல்ல வசூலை பெற்றுள்ளது விஐபி 2
  • Share
  • 0 Comment(s)