சபாஷ் நாயுடு மீண்டும் தொடக்கம்
Posted: Mon,17 Jul 2017 02:55:19 GMT
கமல் இயக்கி நடிக்க, 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படம் சபாஷ் நாயுடு. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்திருந்த வேளையில், கமல்ஹாசனுக்கு காலில் அடிபட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கமல் உடல்நிலை தேறிவிட்டாலும், விஸ்வரூபம் 2 மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
இதன் காரணமாக சபாஷ் நாயுடு படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இச்செய்திகளை சபாஷ் நாயுடு படக்குழு மறுத்துள்ளது. சில காரணங்களால் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கும் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் ஸ்ருதிஹாசன், பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
  • Share
  • 0 Comment(s)