வேலைக்காரனில் ஃபஹத்தின் பாத்திரம் பற்றி கூறும் மோகன்ராஜா
Posted: Mon,17 Jul 2017 02:52:11 GMT
தனி ஒருவன் படத்தையடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் படம் வேலைக்காரன். தனி ஒருவன் படத்தில் நாயகனுக்கு இணையான பாத்திரத்தில் அரவிந்த்சாமியின் பாத்திரம் அமைந்திருந்ததுபோல், இப்படத்தில் நாயகன் சிவகார்த்திகேயனின் பாத்திரத்துக்கு இணையான பாத்திரத்தில் ஃபஹத் ஃபாசிலின் பாத்திரத்தை அமைத்துள்ளார் மோகன்ராஜா.
இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் பாத்திரம் பற்றியும் அவர் இக்கதைக்கு தேர்ந்தெடுக்கப்பட விதம் குறித்தும் கூறியிருக்கும் மோகன்ராஜா, “ஃபஹத் ஃபாசில் கேரக்டரில் நெகட்டிவ், பாசிட்டிவ் இரண்டு ஷேட்களும் உண்டு. ஆதி என்கிற அவரின் கேரக்டருக்கும் அறிவு என்கிற சிவகார்த்திக்கும் வேறு பெயர்களும் உண்டு. அது கதைக்கான சுவாரஸ்யம். ஃபஹத் என்னிடம் கதையே கேட்காமல்தான், இந்த கமிட்மென்ட்டுக்குள் வந்தார். அதுவே எனக்குப் பெரிய பொறுப்பைத் தந்தது.
ஃபஹத் நடிகர்களில் தனித்து நிற்கிறார். தன்னை எங்கு நிலைநிறுத்த வேண்டும், எப்படித் தனித்துக் காட்ட வேண்டும், தனக்கு என்ன மாதிரியான பேர் வரணும் என்பதில் அவர் தெளிவாக உள்ளார். ஃபஹத் நம் சினிமாக்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் முக்கியமான நபராக இருப்பார், அவ்வளவு அழகாகத் தமிழ் பேசுகிறார். அவரே டப்பிங் பேச உள்ளார். `நீங்க எதை வேணும்னாலும் திங்க் பண்ணுங்கடா. இங்க ஃபஹத் பாசில்னு ஒருத்தன் இருக்கான்டா’ என்று சொல்வதுபோல... ஓர் இயக்குநருக்கு அவர் ஒரு வரப்பிரசாதம்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)