லண்டன் நிகழ்ச்சி சர்ச்சை: ரஹ்மான் விளக்கம்
Posted: Mon,17 Jul 2017 02:18:25 GMT
ரஹ்மான் திரைத்துறையில் கால்பதித்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி லண்டனில் நடைபெற்ற நேற்று இன்று நாளை என்ற இசை நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியில் 16 இந்தி பாடல்களையும், 12 தமிழ் பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் பாடியதாக தெரிகிறது.
இந்நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் பாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தி பேசும் ரசிகர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது மட்டுமல்லாமல், நுழைவு கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டு அதை ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.
இப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ரஹ்மான், “ரசிகர்கள் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களுக்கு நிறைய கடமைப்பட்டு இருக்கிறேன். எங்கள் இசைக்குழு சிறப்பான பாடல்களை தர முயன்று இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நாங்கள் நேர்மையாகவே நடந்து கொண்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)