கார்கில் பகுதியில் முன்னாள் சென்னை மேயர்
Posted: Mon,17 Jul 2017 02:17:32 GMT
கார்கில் போரில் இறந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விக்காக கார்கில் பகுதியில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கார்கில் போரில் பாதிக்கப்பட்ட போர்வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவதற்காக இந்திய தடகள அமைப்பு நடத்திய இந்த மாரத்தான் போட்டியில் சென்னை மாநகர முன்னாள் மேயரும் தற்போதைய சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியம் கலந்து கொண்டார்.
200 பேர் கலந்து கொண்ட இப்போட்டியின் 21 கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்து பதக்கமும் பெற்றுள்ளார் மா.சுப்ரமணியம். இப்போட்டியில் கலந்து கொண்டது குறித்து கூறியிருக்கும் அவர், ”கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி இதுவரை தொடர்ந்து 54 மாரத்தான் போட்டி களில் பங்கேற்று ஓடியுள்ளேன். ஆனால், கார்கிலில் நடந்த மாரத் தான் போட்டியில் போரில் இறந்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்விக்காக ஓடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. மலைப்பகுதியில் கடும் குளிரில் ஓடிய அனுபவத்தை எங்களால் மறக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்
சென்னையில் இருந்து வந்து போட்டியில் கலந்து கொண்ட மா.சுப்ரமணியத்தை, ஜம்மு காஷ்மீர் சட்ட மேலவைத் தலைவர் ஹாஜி அனாயத் அலி பாராட்டியுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)