சசிகலா விவகாரம்: விசாரணை கோரும் வாசன்
Posted: Mon,17 Jul 2017 02:16:45 GMT
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக டிஜிபி ரூபா புகார் தெரிவித்த நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் புகாருக்கு உள்ளான சிறைத்துறை அதிகாரி சத்யநாராயண ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தமாக தலைவர் ஜி.கே.வாசன், “கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையிலே சசிகலாவுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டது சம்பந்தமாக எழுந்த பிரச்சினையில் விசாரணை தொடங்க இருந்தது.
இச்சூழலில் இப்பிரச்சினையில் குற்றம் சாட்டிய சிறைத்துறையின் டி.ஐ.ஜி. ரூபாவுக்கு பணியிட மாறுதல் வழங்கியிருப்பதும் மற்றும் சிறைத்துறையின் கூடுதல் டி.ஜி.பி. சத்ய நாராயணராவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருப்பதும் மேலும் பல சந்தேகங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.
இந்த திடீர் மாறுதல்கள் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு இடையேயான பனிப்போரின் காரணத்தினாலா அல்லது சிறைச்சாலையில் நடக்கின்ற விதி மீறல்களில் உள்ள சரி, தவறை வெளிப்படுத்துவதற்கான விசாரணைக்காக அமைக்கப்பட்ட குழுவினால் எடுக்கப்பட்ட முடிவா என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது கர்நாடக ஆட்சியாளர்களின் கடமை. எனவே இந்த முக்கியப் பிரச்சினையில் உயர் மட்ட விசாரணை நடைபெற்று அதன் அடிப்படையில் உண்மை நிலையானது வெளிப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)