உயரப்பறக்கும் பங்குச்சந்தை
Posted: Mon,17 Jul 2017 02:15:24 GMT
கடந்த சில மாதங்களாக புதிய உயரங்களை தொட்டு வருகிறது இந்திய பங்குச்சந்தை. குறிப்பாக கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் அதிக புள்ளிகளை தொட்டு சாதனை படத்து வருகிறது.
இந்திய குடியரசுத்தலைவர் தேர்தல், ஜிஎஸ்டி அறிமுகம் மற்றும் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் உயர்வு போன்ற காரணங்களால் பங்குச்சந்தை உச்சத்தை அடைந்துள்ளது.
நிப்டி 9,900 புள்ளிகளை தொட்ட நிலையில் முதன்முறையாக அந்த உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 54.03 புள்ளிகள் உயர்ந்து 32,074.78-ஆகவும், நிப்டி 29.60 புள்ளிகள் உயர்ந்து 29.60-ஆகவும் முடிந்துள்ளன.
  • Share
  • 0 Comment(s)