ஒப்பந்தத்தை மீறினாரா ஆர்த்தி
Posted: Mon,17 Jul 2017 01:27:03 GMT
விஜய் தொலைக்காட்சியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகை ஆர்த்தி, இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டாலும் 100 நாட்கள் வரை அந்நிகழ்ச்சி பற்றி வெளியே பேட்டி கொடுப்பதோ கருத்து சொல்வதோ கூடாது என்பது விஜய் தொலைகாட்சியின் ஒப்பந்தங்களில் ஒன்று.
ஆனால் அதை மீறி பத்திரிக்கை பேட்டி ஒன்றில், “கமல் சார் எனக்கு ஆறுதல் சொல்லுற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலை. எந்த கவலையும் எனக்கு இல்லை. ஆனால் என்னை வெச்சி ட்வீட்டு, மீம்னு நெட்டுல செய் செய்னு செய்துருக்காங்க. பார்த்தேன். இருந்தாலும் நான் எதுவுமே பேசக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.
எதுவுமே பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு நடிகர் கமலையும், நிகழ்ச்சியையும் விமர்சனம் செய்வதுபோல் பேட்டி கொடுத்துள்ளார் ஆர்த்தி.
  • Share
  • 0 Comment(s)