டிக் டிக் டிக் முதல் பார்வை வெளியீடு
Posted: Mon,17 Jul 2017 01:26:13 GMT
மிருதன் படத்தையடுத்து டிக் டிக் டிக் படத்தின் மூலம் மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைகிறார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். அத்துடன் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் இப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.
75 சதவீதத்துக்கு மேல் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அறிவித்த படி இன்று (ஜூலை 17) இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விண்வெளி, வேற்று கிரகவாசிகள், கால இயந்திரம் என வித்தியாசமான கதைகளத்தில் உருவாகிவரும் இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரும் வித்தியாசமாக இருப்பதுடன், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
  • Share
  • 0 Comment(s)