29ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த பாமக
Posted: Mon,17 Jul 2017 01:25:26 GMT
பாட்டாளி மக்கள் கட்சியின் 29வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் விழா நடைபெற்றது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
அப்போது பேசிய ராம்தாஸ், “கடந்த 1989-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பாமக தொடங்கப்பட்டது. கடந்த 28 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு, தமிழ் நலனுக்கு, மொழிக்கு என ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள எல்லா சமுதாய மக்களுக்காகவும் போராடிய கட்சி பாமக. தமி ழகத்தில் அதிமுக முடிந்து போன கட்சியாக விளங்குகிறது. திமுகவும் முடியப் போகிறது. தமிழகத்தில் ஏற்படுகிற அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது பாமக என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். இனி எந்த காலத்திலும் அதிமுக, திமுகவுன் பாமக கூட்டணி வைக்காது. இந்த இரண்டு கட்சிகளைத் தவிர பாமக தலைமையை ஏற்று யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ளுவோம். தற் போது ஊடகங்களுடன்தான் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். ஊடகங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை.
இனி வரும் தேர்தல்களில் பாமக மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி. நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 15 தொகுதிகளிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும் பான்மை வெற்றியை பாமக பெறும். அன்புமணிக்கு பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தருகின்றனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மாற்றம் வந்தால்தான் தமிழகம் முன்னேறும்.” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)