Posted: Fri,14 Jul 2017 04:54:26 GMT
நம்முடைய சூரிய மண்டலத்தின் தலைவனாக விளங்கும் சூரியனைப்போல் பல லட்சம் சூரிய நட்சத்திரங்கள் அவற்றிற்குள் இருக்கும் ஈர்ப்பு விசையால் உருவாவது கேலக்ஸி எனப்படும் விண்மீன்திரள் இந்த விண்மீன் திரள்கள் பல இணைந்து உருவாவதுதான் சூப்பர் க்ளஸ்டர் எனப்படும் கேலக்ஸி பெரும் கொத்து.
அப்படிப்பட்ட ஒரு கேலக்ஸி பெரும் கொத்த தற்போது இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கேலக்ஸி பெரும் கொத்துக்கு சரஸ்வதி என்று பெயரிடப்பட்டுள்ளது. நாம் இருக்கும் கேலக்ஸி மில்கிவே எனப்படுகிறது. மில்கிவே உள்ளிட்ட கேலக்ஸிகள் ஒன்றினைந்து இலணியாக்கியா என்ற கேலக்ஸி பெரும் கொத்தாக உள்ளன.
அதேபோல் இந்த சரஸ்வதி கேலக்ஸி பெரும்கொத்தில் பல ஆயிரம் கேலக்ஸிகள் இணைந்து உள்ளன. 4 பில்லியன் ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கேலக்ஸி பெரும் கொத்து 650 மில்லியன் ஒளியாண்டு நீளம் உடையதாக உள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this