Posted: Sun,02 Jul 2017 05:15:36 GMT
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் சாதனை பயணத்தி மைல்கல் என்று சொல்லுபடியாக 2008ம் ஆண்டு நிலாவுக்கு சந்திராயன் செயற்கைகோள் அனுப்பப்பட்டது. தற்போது சந்திராயன் 2 திட்டம் தயாராகிவருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண்குமார் சந்திராயன் 2 குறித்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”சந்திராயன்-2 செயற்கைக்கோள் 2018ம் ஆண்டு மார்ச்சில் விண்ணில் செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், “தனியார் நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ செயற்கைக்கோள் தயாரிக்கும் பணியில் ஈடுபடும்” என்றும் தெரிவித்தார்.
  • 0 Comment(s)
Be the first person to like this