நல்ல படம் ஆனால் வசூல் இல்லை
Posted: Mon,19 Jun 2017 11:48:27 GMT
கடந்த வாரம் பீச்சாங்கை, மரகத நாணயம் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இப்படங்களில் பீச்சாங்கை வியாழக்கிழமையே வெளியானதால் ஓரளவு முதல் நாள் வசூல் மற்றும் வார இறுதி வசூல் என லாபத்தை நெருங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியான மரகத நாணயம் படத்துக்கு விமர்சனக்கள் மற்றும் வாய்மொழி பரவல் மூலம் கிடைத்த விளம்பரத்தால் வார இறுதி முடிந்தும் ஓரளவு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் என்னதான் வரவேற்பு இருந்தாலும் வரும் வாரத்தில் இப்படங்கள் அரங்குகளில் நிலைத்திருக்க வாய்ப்பு இல்லை
வரும் வாரத்தில் சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் ஜெயம் ரவியின் வனமகன் உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் நிச்சயமாக அரங்குகளில் இருந்து கடந்த வாரப்படங்களை வெளியேற்றிவிடுவார்கள் என்பதால் நல்ல படமாக இருந்தும் வசூலை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)