”திமுகவுக்கு அருகதை கிடையாது”, சொல்கிறார் தமிழிசை
Posted: Mon,19 Jun 2017 11:47:34 GMT
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த செய்தியை ஆதாரமாக வைத்து ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியிருப்பதற்கு பதிலளித்திருக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஊழல் பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை என்று தெரிவித்துள்ளார்
மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், “தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சரியாக செயல்படவில்லை. இரண்டு திராவிட கட்சிகளும் ஊழல் கட்சிகள்தான். சென்னை நகரம் தற்போது போதையின் தலைநகரமாக மாறிவிட்டது. புழல் சிறையில் பாகிஸ்தான் கொடி வீசப்பட்டது, பாதுகாப்பை மீறி நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை.
தமிழகம் முழுவதும் பா.ஜ., வினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் பிரதமர் மோடி அரசின் மூன்றாண்டு சாதனை கண்காட்சி நடந்தது. அதில் பிரதமர் மோடியின் படம் கிழித்து எறியப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் குறித்து போலீசில் புகார். செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக சட்டசபையில், ஊழல் சம்பந்தமான சி.டி., யை வைத்துக்கொண்டு ஸ்டாலின் ஆட்சியை கலைக்க சொல்வது முறையில்லாத செயல். ஊழல் குறித்து பேச தி.மு.க., வுக்கு தகுதி கிடையாது, என்றார்.
  • Share
  • 0 Comment(s)