குடியரசுத்தலைவர் வேட்பாளர்: பஜகவின் வியூகம்
Posted: Mon,19 Jun 2017 11:44:37 GMT
குடியரசுத்தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை அறிவித்துள்ளது பாஜக தலைமை. இவர் தற்போது பிஹார் ஆளுனராக இருந்து வருகிறார். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் தலிக் சமுதாயத்தை சேர்ந்தவர். 1994 முதல் 2006 வரை 12 ஆண்டுகள் உ.பி.,யில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் மற்றும் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் வெற்றி பெறுவதை வைத்தே மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு அமையும் என்பதால் பல்வேறு விதத்திலும் உத்தரபிரதேசத்தில் நிலை கொள்ள பாஜக திட்டமிட்டு வருகிறது.
சாதி மற்றும் மத ரீதியாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த உயர் ஜாதி இந்துக்களில் வாக்குகளை கவரும் செயல்களை செய்துவரும் பாஜக, ராஜ்நாத்தை பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் தலித்களில் வாக்குகளுக்கும் குறிவைத்துள்ளது.
  • Share
  • 0 Comment(s)