துருக்கியில் கமல்ஹாசன் படப்பிடிப்பு
Posted: Mon,19 Jun 2017 11:43:54 GMT
கமல்ஹாசன் நடித்து, இயக்கி தயாரித்து வெளியான படம் விஸ்வரூபம். இப்படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடக்கும் போதே, இரண்டாம் பாகத்துக்காக படப்பிடிப்பும் 80 சதவீதம் அளவுக்கு நடந்து முடிந்துவிட்டது.
இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு கைமாறி ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் கைகளுக்கு சென்றதால் படம் மேற்கொண்டு வேலைகள் ஏதுவும் நடக்காமல் தொய்வடைந்தது. இதன் காரணமாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பை மீண்டும் கைவசப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன்.
இதையடுத்து படப்பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை பரங்கிமலை பகுதியில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் துருக்கி நாட்டில் விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது. சிலநாட்களில் அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் படக்குழு முழுவீச்சில் பின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இவ்வாண்டுக்குள் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடும் யோசனையில் உள்ளாராம் கமல்ஹாசன்.
  • Share
  • 0 Comment(s)