ஆந்திரா மாசு படக்கூடாது, தமிழகம் அழிந்தால் பரவாயில்லை: மத்திய அரசின் நிலைப்பாடு
Posted: Sat,17 Jun 2017 03:13:53 GMT
உலகிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி மின் உற்பத்தி பூங்காவை தனியார் நிறுவன ஒத்துழைப்போது மத்திய அரசு அமைத்துள்ளது. 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த பூங்கா உலகிலேயே அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் ஆகும்.
மாசு ஏற்படுத்தாத மின் உற்பத்தியை பெருக்க திட்டமிட்டு மத்திய அரசு இந்த மின் உற்பத்தி பூங்காவை ஆந்திராவில் அமைத்துள்ளது. 7000 கோடி முதலீட்டில் உருவாகி இருக்கும் இந்த மின் நிலையத்துக்கு மத்திய அரசு 1000 கோடி முதலீடு செய்துள்ளது.
ஆந்திராவில் மாசு ஏற்படுதாத அளவில் மின் உற்பத்தி தொடங்கவேண்டும் என்று நினைக்கும் மத்திய அரசு தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கதிர் வீச்சை வெளியிடும் ஆபத்துடையதும், கடல்நீரில் அனு கதிர்வீச்சை ஏற்படுத்தும் ஆபத்துடையதும், விபத்து ஏற்பட்டால் மூன்று மாவட்டங்களை அழிக்கும் ஆபத்தானதுமான கூடங்குளம் அனுமின் நிலையத்தை தமிழகத்தில் தொடங்கி இருப்பதுடன் மேலும் மேலும் விரிவாக்கம் செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • Share
  • 0 Comment(s)