விக்ரம் பிரபுவின் நேர்மை
Posted: Sat,17 Jun 2017 03:12:23 GMT
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார்.
கும்கி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இவன் வேறமாதிரி, சிகரம் தொடு ஆகிய படங்கள் சராசரியான வெற்றியை பெற்றன. இக்கால கட்டத்தில் விக்ரம் பிரபுவின் சம்பளம் 7 கோடியளவுக்கு உயர்ந்தது.
ஆனால் அதற்கு பிறகு வெளியான வெள்ளக்கார துரை, வாகா, வீரசிவாஜி, சமீபத்தில் வெளியான சத்ரியன் படம் வரை அனைத்து படங்களுமே வசூல் ரீதியாக தோல்வியடைந்துள்ளன. இதன் காரணமாக தனது சம்பளத்தை ஒன்றரை கோடியளவுக்கு குறைத்துக்கொண்டுள்ளார் விக்ரம் பிரபு. அதுமட்டுமல்லாமல், சமிபத்தில் அவர் நடிப்பில் வெளியாகி தோல்வியை தழுவிய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு தன் சம்பளத்தின் பெரும் பகுதியை திருப்பி தந்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)