பாஜகவினர் சந்திப்பு குறித்து சீதாராம் யெச்சூரி பேட்டி
Posted: Sat,17 Jun 2017 03:11:45 GMT
குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்கட்சி தலைவர்களை சந்தித்துவரும் பாஜகவின் முக்கிய தலைவர்கள், அதில் ஒரு கட்டமாக இடதுசாரி தலைவர்களயும் சந்தித்து வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரியை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கைய்யா நாயுடு நேற்று சந்தித்து குடியரசுத்தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி, ”ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. செய்து கொண்டிருப்பது ஒரு மக்கள் தொடர்பு சந்திப்பு போல தான். இந்த தேர்தலில் பா.ஜ.க.விடம் 31 சதவீதம் வாக்குகளும், எதிர்க்கட்சிகளிடம் 69 சதவீதம் வாக்குகளும் உள்ளது. அதனால், எதிர்க்கட்சிகளின் ஆதரவை கண்டிப்பாக நாட வேண்டிய தேவை அக்கட்சிக்கு உள்ளது. மேலும் பா.ஜ.க.வின் வேட்பாளர் யார்? என்பதை தெரியப்படுத்தவில்லை. வேட்பாளர் யார் என்று தெரிவித்தால்தான் நாங்கள் யோசிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)