சூர்யா படத்தில் கார்த்திக்
Posted: Fri,16 Jun 2017 05:09:39 GMT
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஸ் நடிக்கிறார்.
ரம்யா கிருஷ்னன், சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி என ஒரு பட்டாளமே நடிக்கிறது. நடிகை ரேவதியின் கணவர் சுரேஷ் மேனன் என பலரும் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு 80சதவீதம் முடிந்த நிலையில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக் நடிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஒரு முக்கியமான பாத்திரம் படத்தின் இறுதிக்காட்சிக்கு முன்பாக வருவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததாகவும். அப்பாத்திரத்தில் நடிகர் கார்த்திக் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் கருதியதால், அவருடன் பேசி இப்படத்தில் நடிக்க வைத்துள்ளதாகத் தெரிகிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில், கார்த்திக் கலந்துகொள்ள ப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • Share
  • 0 Comment(s)