சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு இன்று தொடக்கம்
Posted: Fri,16 Jun 2017 05:07:32 GMT
பொன்.ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது . இவிழாவில் சிவகார்த்திகேயன், பொன்ராம், சூரி, மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்துக்காக சிலம்பம் கற்று வருகிறாராம் சமந்தா.
சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மோகன். ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டப்பிங் உட்பட தன்னுடைய பணிகளை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், தற்போது பொன் ராம் படத்துக்கு நகர்ந்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)