யாராலும் நெருங்க முடியாத பாகுபலி
Posted: Fri,19 May 2017 03:16:34 GMT
இந்திய திரையுலகைப் பொறுத்தவரை நூறு கோடிகளை வசூல் செய்தால் நூறு கோடி க்ளப்பில் இணைந்தது என்று சொல்வது வழக்கம். ஆனால் பாகுபலி அதையெல்லாம் தாண்டி ஆயிரம் கோடி க்ளப் என்ற ஒரு புதிய விசயத்தை உருவாக்கியது.
தற்போது அதையும் தாண்டி 1500 கோடி வசூல் செய்து 1500 கோடி க்ளப்பை உருவாக்கி இருக்கிறது. ஆனால் இந்த க்ளப்பில் பாகுபலியை தவிர வேறு எந்த ஒரு உறுப்பினரும் இல்லை என்பதே உண்மை.
கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான பாகுபலி 2 படம் வெளியான 21 நாட்களில் 1500 கோடிகளை வசூல் செய்து இந்திய திரைவரலாற்றில் இதுவரை யாரும் எந்த படமும் செய்யாத சாதனையை படைத்துள்ளது. இச்ச்சாதனையை முறியடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை.
  • Share
  • 0 Comment(s)