மோடி ஓபிஎஸ் சந்திப்பு
Posted: Fri,19 May 2017 03:15:37 GMT
இரு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுகவில், கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவைகள் யாருக்கு சொந்தம் என்பதில் ஒபிஎஸ் அணி மற்றும் சசிகலா தரப்புக்கு இடையே போட்டா போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று தங்கள் தரப்பு நியாயங்களை தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதற்காக டெல்லி சென்ற ஓ.பன்னீர் செல்வம், இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஓபிஎஸ், மற்றும் அவரது அணியை சேர்ந்த கேபி முனுசாமி, மைத்ரேயன் எம்.பி, மனோஜ்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் கனிவான பார்வை எந்த அணியின் மீது என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், ஓபிஎஸ்சை சந்திக்க மோடி நேரம் ஒதுக்கி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • Share
  • 0 Comment(s)