பல்வேறு கிளைகளாக பிரியும் பாகுபலி
Posted: Fri,19 May 2017 03:11:05 GMT
பாகுபலி படத்தின் பாத்திரங்கள் ஏறக்குறைய மகாபாரத இதிகாசத்தின் பாத்திரங்கள் அளவுக்கு வலிமையானதாக படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாத்திரங்களின் பின்னாலும் ஒரு பெரிய கதை இருப்பதாகவே சொல்லப்பட்டுள்ளது.
மகாபாரதத்தை கர்ணனின் பார்வையில் பார்ப்பது, பீஷ்மரின் பார்வையில் பார்ப்பது, அர்ஜுனனை நாயனாக்கி பார்ப்பது போன்று, தற்போது பாகுபலி படத்தின் பாத்திரங்களின் கதைகளை தனியாக சொல்ல அரம்பித்துள்ளார்கள்.
ராஜமாதா சிவகாமியின் கதையை, ஆனந்த் நீலகண்டன் என்பவர் ’தி ரைஸ் ஆஃப் சிவகாமி’ என்ற பெயரில் நாவலாக எழுதியுள்ளார். முதல் பகுதி வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்து இரண்டு பாகங்கள் என மூன்று பகுதிகளாக அந்த நாவல் வெளிவர உள்ளது.
  • Share
  • 0 Comment(s)