பண மதிப்பு இழப்பை கெஜ்ரிவால் எதிர்த்தது ஏன்? கபில் மிஸ்ரா போடும் குண்டு
Posted: Fri,19 May 2017 03:10:01 GMT
டெல்லி ஆம் ஆத்மி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா, பண மதிப்பிழப்பை அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்த்த காரணம் என்ன என்பது குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் மிஸ்ரா, “பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கெஜ்ரிவால் ஏன் கடுமையாக எதிர்த்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஏன் கெஜ்ரிவால் பயணம் மேற்கொண்டார். ஏனெனில் அவருக்கு வேண்டப்பட்டவர் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணம் அமலாக்கத்துறை சோதனைக்குள்ளானது. ஆம் ஆத்மிக்கு நன்கொடை அளிப்பவர்களில் போலி நிறுவனங்களின் பட்டியலும் உள்ளது. வாட் வாரியை செலுத்தவில்லை என்று நோட்டீஸ் அனுப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எப்படி ஆம் ஆத்மி நன்கொடை பெற்றுக்கொண்டது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் குமார், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், 2013 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி பொறுப்பேற்பதற்கு 10 நாட்கள் முன்பு டெல்லி அரசு, முகேஷ் குமாரின் நிறுவனம் வாட் வரியை செலுத்தவில்லை என கூறி, நோட்டீஸ் அனுப்பியது. அதன்பிறகு ஆம் ஆத்மிக்கு முகேஷ் குமார், 2 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார். முகேஷ் குமாரின் நிறுவனத்திற்கு எதிராக ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை”என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)