டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஓபிஎஸ்
Posted: Fri,19 May 2017 02:41:47 GMT
அதிமுகவின் சின்னம், கொடி, கட்சி பெயர் ஆகியவை யாருக்கு சொந்தம் என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதற்காக இன்று டெல்லி சென்ற ஒ.பன்னீர் செல்வம், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
தேர்தல் ஆணையத்தில் தான் செய்த முறையீடு குறித்து தெரிவித்த அவர், "அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரால் நியமிக்கபட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் தடுத்து நிறுத்தி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டேன்" என்று தெரிவித்தார்.
மேலும், “இரு அணிகளும் இணைந்து விடக் கூடாது என்பதில் சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். அதனால் தான் பேச்சுவார்த்தை மிகவும் மந்த கதியில் சென்று கொண்டிருக்கிறது. இணைப்புக்கு யார் முட்டுக் கட்டை போடுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்” என்றும் தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)