ரஜினியின் கருத்துக்கு மகிழ்ச்சி தெரிவித்த ஸ்டாலின்
Posted: Fri,19 May 2017 02:40:55 GMT
தமிழ்நாட்டில் நடந்து வரும் மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ”வருமான வரித்துறை ரெய்டுகள் முறையாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் நடந்தால் உள்ளபடியே நாங்கள் அதை வரவேற்கிறோம். ஆனால், திட்டமிட்டு அரசியல் நோக்கத்தோடு ஒரு கட்சியை உடைப்பதற்கு, பிறகு உடைந்த கட்சியை இணைப்பதற்கு பயன்படுத்தினால் அதை நாங்கள் ஏற்க முடியாது" என்று தெரிவித்தார்.
ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி, "மு.க.ஸ்டாலின் என்னுடைய நெருங்கிய நண்பர். நல்ல திறமையான நிர்வாகி" என்று தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “அவருடைய பாணியிலே, மொழியிலே நான் சொல்ல வேண்டுமென்று சொன்னால், மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)