பதிலளிக்க மறுத்த முதல்வர்
Posted: Fri,19 May 2017 02:40:01 GMT
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் நடைபெறும் அரசு மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக உதகை வந்த பழனிச்சாமி, மலர் கண்காட்சியை தொடக்கி வைத்ததுடன் வேறு சில அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். சட்டமன்றத்தை கூட்டுவதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்த அவர், “விரைவில் சட்டமன்றம் கூட்டப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் கேட்கப்பட்ட கேள்விகளுகு பதிலளிக்க மறுத்த முதல்வர், “நான் அரசு விழாவுக்காக வந்திருக்கிறேன், இச்சமயத்தில் அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)