இறுதிப்போட்டியில் புனே அணியை சந்திக்கப்போவது யார்?
Posted: Fri,19 May 2017 02:39:19 GMT
மே 17ம் தேதி நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் நடப்பு சாம்பியன் ஐதராபாத்தை வென்ற கொல்கத்தா அணி இன்று மும்பையுடன் தகுதிச்சுற்றுக்கான போட்டியில் மோதுகின்றன.
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்லும் முதல் தகுதிச்சுற்றில் புனே அணியுடன் மோதி தோற்ற மும்பை அணிக்கு, இப்போட்டி மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைய மற்றொரு வாய்ப்பு இருக்கிறது.
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இன்று நடக்கும் கொல்கத்தா – மும்பை அணிகளுக்கிடையேயான போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் புனே அணியுடன் விளையாட தகுதி பெறும். ஆகவே இப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
  • Share
  • 0 Comment(s)