தேமுதிகவில் மாற்றம்
Posted: Fri,19 May 2017 12:41:40 GMT
தேமுதிக கட்சி ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளுகளில் எதிர்கட்சி என்ற அந்தஸ்தை பெற முடிந்தது ஆனால். அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் எடுத்த தவறான முடிவுகளால் அக்கட்சியில் மிகப்பெரிய தேக்க நிலை ஏற்பட்டது.
இந்த தேக்க நிலையை போக்கும் விதமாக மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி பல போராட்டங்களை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளது தேமுதிக. மக்கள் பிரச்சினைக்காக போராடுவதால் விட்ட இடத்தை பிடிக்க முடியும் என நினைக்கும் விஜயகாந்த், கட்சியிலும் பல மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளாராம்.
தற்போது தேமுதிகவின் தலைவர் மற்றும் பொதுச்ச்செயலாளர் என இரண்டு பதவிகளையும் தன் வசம் வைத்திருக்கும் விஜயகாந்த், பொதுச்செயலாளர் பதவிக்கு தன் மனைவியும் தேமுதிக மகளிரணி தலைவருமான பிரேமலதா விஜயகாந்தை நியமிக்க உள்ளாராம்
  • Share
  • 0 Comment(s)