”இரட்டை இலை யாருக்கு சொந்தம்”, நடராஜன் கருத்து
Posted: Fri,19 May 2017 12:40:59 GMT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா குடும்பம் அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தினாலும், சசிகலாவின் கணவர் நடராஜன் சற்று ஒதுங்கியே இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மே 18 நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவறுகளை மறந்து, பிரிந்து கிடக்கும் அதிமுக இரு அணி களும் ஒன்றுசேர்ந்து, இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண் டும். முன்பு முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை டெல்லியில் இருந்து மீட்டு வந்தவன் நான். தலைமைக் கழகத்தையும் மீட்ட வன் நான். சந்தேகம் உள்ளவர்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
எம்ஜிஆரின் சின்னமான இரட்டை இலை, தனக்குத்தான் சொந்தம் என்றும் யாரும் உரிமை கோர முடியாது. அதிமுக தொண் டர்களுக்கு மட்டுமே அது சொந்த மானது.
ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்கத் தகுதியற்றவர் என்று வழக்குத் தொடர்ந்த பி.எச்.பாண்டியன் தான், தற்போது அதிமுக பிளவுபட காரணமாக இருப்பவர். இந்தச் சதியில் தொண்டர்கள் யாரும் சிக்கிக்கொள்ளவில்லை. தொண்டர்கள் தெளிவாக இருக் கின்றனர். அதனால், பிளவுபட்ட இரு அணிகளும் ஒன்றிணைந் தால், நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற முடியாத நிலையை ஜெயலலிதா உருவாக்கினார். அந்த வரலாற்றை நாம் மீண்டும் உருவாக்க வேண்டும். அதற்கு, இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)