
இன்று உலகம் முழுவதும் பாகுபலி படத்தை பற்றி பேச்சு இருந்து வருகிறது. அத்துடன் இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படம் பற்றிய பேச்சும் எழுந்துள்ளது.
பாகுபலியின் வெற்றி மற்றும் அடுத்த படம் பற்றி மனம் திறந்திருக்கும் ராஜமௌலி, “உண்மையாக சொல்கிறேன். இந்த மாதிரியான ஒரு வெற்றிக்காகத்தான் உழைத்தோம். அரும்பாடு பட்டு காத்திருந்தோம். அது கிடைக்கும்போது எங்களுக்கு நம்புவது கடினமாக இருக்கிறது. இந்த உணர்வை எங்களால் வர்ணிக்கவே முடியவில்லை. இந்த வெற்றி நிஜமாக இருந்தாலும் நம்புவது கடினமாக இருக்கிறது.
எனது நீண்ட நாள் ஆசை, மஹாபாரதக் கதையை படமாக்க வேண்டும் என்பதே. அது எவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்படவேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். எல்லாருடைய கற்பனயை தாண்டிய ஒன்றாக இருக வேண்டும். எனது மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்தாலும் எப்போது நடக்கும் எனத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.