அஜீத்துக்காக காத்திருக்கும் அல்போன்ஸ் புத்திரன்
Posted: Fri,19 May 2017 12:38:35 GMT
மலையாளத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமான பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், தன்னுடைய புகப்புத்தகத்தில், “அஜீத் படத்தை இயக்குவீர்களா” என்ற ஒரு ரசிகரின் கேள்விக்கு, காத்திருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்
அல்போன்ஸ் புத்திரன், பிரேமம் படத்துக்கு முன்பு மலையாளம் மற்றும் தமிழில் நேரம் என்ற படத்தை இயக்கினார். அப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆனதையொட்டி, தனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவின் கமெண்ட் பகுதியில் ஒரு அஜீத் ரசிகர் "அஜித் படம் இயக்குவீர்களா" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அக்கேள்விக்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன், "நானும் எனது நண்பன் ஐபி கார்த்திகேயனும் 3 மணி நேரம் தல அஜித் குமாரின் வீட்டின் முன் காத்துக் கிடந்தது நினைவில் இருக்கிறது. இது நடந்தது 9-10 வருடங்களுக்கு முன்.
நுங்கம்பாக்கம் எஸ்.ஏ.ஈ கல்லூரியில் நான் படித்தபோது. அப்போதும் அவரை சந்திக்க முடியவில்லை, இப்போதும் முடியவில்லை. இந்த காத்திருப்பு ஒரு சிறந்த படத்துக்கானதாகக் கூட இருக்கலாம். அவருடன் இணைந்து பணியாற்ற சரியான நேரத்துக்காக நான் காத்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)