பாஜகவை நோக்கி நகரும் நிதிஷ்குமார்
Posted: Fri,19 May 2017 10:25:52 GMT
மோடியை ஆரம்பம் முதலே எதிர்த்து வருபவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். ஆனால் சில நாட்களாக அவருடைய நடவடிக்கையில் மாற்றம் காணப்படுகிறது. பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுத்து வருகிறார். கூட்டணி கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியை விட்டு விலகினால், பாஜகவின் ஆதரவோடு ஆட்சியை தொடரலாம் என்ற எண்ணத்தில் அவர் இருப்பதாக தெரிகிறது.
டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நிதிஷ்குமார், “கங்கை நதி இப்போது சுத்தமாக இல்லை. அது சுத்தமாக இருக்கவேண்டுமானால், அதன் நீரோட்டம் சீரானதாக இருக்க வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை கங்கை சுத்தமாக இருக்காது. வண்டல் மண் போன்ற பல பொருள்களால், கங்கையின் இயற்கையான நீரோட்டம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால்தான், கங்கையில் அடிக்கடி வெள்ளமும் ஏற்படுகிறது. இந்த பொருள்களை தூர்வாரும் வரை கங்கையில் நீரோட்டம் சீராக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
மோடியின் கனவு திட்டமான கங்கை நதியை தூய்மையாக்கும் திட்டம் குறித்து, நிதிஷ்குமார் பேசியிருப்பது, அவர் பாஜகவை நோக்கி சென்று கொண்டிருப்பதையே விளக்குவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
  • Share
  • 0 Comment(s)