ரஜினியின் உண்மை முகம்
Posted: Fri,19 May 2017 10:24:47 GMT
சில மாதங்களுக்கு முன் 2.0 படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக ரஜினியை இலங்கை அழைத்துச் செல்ல திட்டமிட்டது அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா. ஆனால் தமிழக தலைவர்களின் எதிர்ப்பை அடுத்து தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார் ரஜினி.
இலங்கை பயணம் ரத்து செய்தது குறித்து வருத்தம் தெரிவித்திருந்த ரஜினி, போரால் உடமைகளை இழந்த தமிழர்களை சந்திக்க ஆர்வமாக இருந்தேன் என்றும். மாவீர்கள் சுவாசித்த சுவாசக்காற்றை நானும் சுவாசிக்க இருந்தேன் என்றெல்லாம் அறிக்கை விட்டார். ரஜினியின் இந்த அறிக்கையை படித்த பலரும் ஈழத்தமிழர் மீது ரஜினிக்கு இருந்த கரிசனத்தை மெச்சினார்கள்.
இந்நிலையில் நேற்று ரசிகர்களை சந்திக்க வந்த ரஜினியிடம், லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்த நினைவு தினமான மே18 பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அக்கேள்விக்கு ”நோ கமெண்ட்ஸ்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். தன் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு செல்வதை ஏதே தமிழர்களை மீட்பதற்காக செல்வது போல் சொல்லிக்கொண்ட ரஜினியின் உண்மை முகம் இப்போது தெரியவந்துள்ளது.
  • Share
  • 0 Comment(s)