மாறு வேடத்தில் அலையும் பிரபாஸ்
Posted: Fri,19 May 2017 10:23:49 GMT
பாகுபலி படத்தின் படப்பிடிபுக்காக ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளார் பிரபாஸ். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்ததையடுத்து, தற்போது அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்தியாவில் எந்த மூலைக்கு சென்றாலும் தன்னை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பதால் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுள்ள பிரபாஸுக்கு அங்கும் தனிமையை ரசிக்க முடியவில்லை. அமெரிக்காவிலும் பாகுபலி படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ஏறக்குறைய 200 கோடிகளை வசூல் செய்துள்ளது.
இதன் காரணமாக அமெரிக்காவிலும் பிரபாஸை அனைவரும் எளிதில் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். இதன் காரணமாக அமெரிக்காவில் வெளியே செல்லும் போது மாறு வேடத்தில் செல்கிறாராம் பிரபாஸ்.
  • Share
  • 0 Comment(s)