கைமாறியது விஜய் படம்
Posted: Fri,19 May 2017 06:07:33 GMT
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பில் இருந்து லைகா நிறுவனம் பின்வாங்கியுள்ளது.
இதன் காரணமாக இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. அரசியல் அதிகார துஷ்பிரயேக குற்றச்சாட்டுக்கள் சன் பிக்சர்ஸ் மீது எழுந்த காரணத்தால், எந்திரன் படத்துக்குப்பிறகு தயாரிப்பு பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படம் மூலம் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்குகிறது.
முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘ஸ்பைடர்’ படத்தின் பின் தயாரிப்பு பணிகளில் தற்போது பரபரப்பாக இருக்கும் முருகதாஸ் அப்படத்தின் வெளியிட்டுக்குப்பின், விஜய் படப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளார்.
  • Share
  • 0 Comment(s)