அமைச்சர் அனில் மாதவ் காலமானார்
Posted: Thu,18 May 2017 10:31:05 GMT
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, நுரையீரல் புற்றுநோய் காரணமாக காலமானார். அவருக்கு வயது 60. இளம் வயது முதல் ஆர்.எஸ்.எஸ் தொண்டராக இருந்த தவே, மோடி அரசில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். ஜல்லிகட்டு போராட்டத்தின் போது தமிழகத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
தவே அவர்களின் மறைவையொட்டி இரங்கல் தெரிவித்துள்ள மோடி, ”என்னுடைய நண்பர் மற்றும் என்னுடன் பணியாற்றும் மிகவும் மதிப்பிற்குரிய ஒருவரான அனில் மாதவ் தவே திடீரென காலமானார் என செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என்னுடையை இரங்கலை தெரிவிக்கிறேன்.
அனில் மாதவ் தவே ஜி ஒரு அர்ப்பணிக்கப்பட்ட பொது ஊழியராக நினைவில் இருப்பார். அனில் மாதவ் தவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நேற்று மாலை வரையில் நான் அனில் மாதவ் தவே ஜியுடன் தான் இருந்தேன், அவருடன் அரசியல் விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை செய்தேன், அவருடைய இழப்பு எனக்கு தனிப்பட்ட இழப்பாகும்” என்று தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)