பங்கு சந்தையில் தொடர் முன்னேற்றம்
Posted: Wed,17 May 2017 02:00:01 GMT
கடந்த சில மாதங்களாகவே இந்திய பங்கு சந்தையில் தொடர் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. மத்தியில் நிலையான ஆட்சி அமைந்திருப்பது, நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆளும் பாஜக அரசுக்கு பலம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பது ஆகிய காரணிகள் பங்கு சந்தை உயர்வுக்கு கரணமாக கருதப்படுகின்றன.
இந்நிலையில் இன்று சென்செக்ஸ், நிப்டி ஆகிய இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. இன்றைய வர்த்தகநேர தொடக்கத்தில் பங்குச்சந்தைகள் சற்றே சரிவுடன் தொடங்கினாலும். அன்னிய முதலீடு அதிகரிப்பு, தென்மேற்கு பருவம மழை குறித்த அறிவிப்பு ஆகிய காரணங்களால் பங்குச்சந்தைகள் உயர்வடைந்தது. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 76.17 புள்ளிகள் உயர்ந்து 30,658.77-ஆகவும், நிப்டி 13.50 புள்ளிகள் உயர்ந்து 9,525.75-ஆகவும் இருந்தன.
  • Share
  • 0 Comment(s)