வரலாற்று சாதனை படைத்த கத்திரி வெயில்
Posted: Wed,17 May 2017 07:41:46 GMT
தமிழகத்தில் இதுவரை பதிவான வெப்பநிலை அளவுகளில் இல்லாத ஒரு பதிவாக நேற்று திருத்தணியில் 115 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் ட்ரான்ஸ்ஃபார்மர் எனப்படும் மின்மாற்றிகள் வெடித்து சிதறியது.
இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ”கடல்காற்று வீசுவது தாமதம் ஆவதாலும், தரைக்காற்று வீசுவதாலும் வெயில் அதிகரித்துள்ளது. இந்தநிலை மேலும் 2 அல்லது 3 தினங்களுக்கு நீடிக்கும். திருத்தணியில் பதிவான வெயில், நம்மிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இதுவரையில் பதிவானதிலேயே அதிகமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
நேற்றைய உச்சபட்ச வெப்பநிலை வாட்டி எடுத்தற்கு ஆறுதலாக இரவு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • Share
  • 0 Comment(s)