மிளகு வெங்காய குழம்பு
Posted: Tue,16 May 2017 04:40:39 GMT
வெயில் காலத்தில் மிளகாய் அதிகம் பயன்படுத்தும் மசாலா வகை குழம்புகளை சாப்பிடுவதால் வெம்மை சம்மந்தப்பட்ட நோய்கள் வரும் வாய்ப்பு இருப்பதால், மிளகை மட்டும் பயன்படுத்தி செய்யப்படும் மசாலா குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
பூண்டு – 10 பல்
இஞ்சி – சிறுதுண்டு
மிளகு – 3 தேனீர் கரண்டி
கொத்தமல்லி பொடி – 25 கிராம்
ஏலக்காய் – 1
கத்தரிக்காய் (அல்லது ஏதாவது ஒரு காய்) – 150 கிராம்
எண்ணை – 2 உணவுக்கரணி
கடுகு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
உறித்த சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, ஏலக்காய், கொத்தமல்லி ஆகியவற்றை மைபோல அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். கத்திரிக்காய் சிறிது வதங்கிய உடன் அரைத்த மசாலா கலவையை சேர்த்து கொதிக்கவிடவும். மசாலாவில் காய் வேகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்.
  • Share
  • 0 Comment(s)