அனல் காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
Posted: Tue,16 May 2017 11:06:42 GMT
சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துள்ளது, அத்துடன் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வட தமிழகம், புதுச்சேரியில் அனல் காற்று வீசும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு. 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. திருத்தணியில் 112 டிகிரி பாரன்ஹீட்டும், வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனல் காற்று வீசுவதால், காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை குழைந்தைகள், பெரியவர்கள் வெளியே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)