”போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்”, அமைச்சர் கோரிக்கை
Posted: Tue,16 May 2017 11:04:56 GMT
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தோல்வியடையும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஸ்டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை பணிக்கு வரவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எந்த இடத்திலும் பயணிகள் நெரிசல் இல்லை. இன்று நிலைமை சீரடையும். தொழிலாளர்களின் உறுதிமொழியை ஏற்க முதல்வர் உறுதியளித்துள்ளார்.
ஸ்டிரைக் தொடர்பாக 5 கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தோல்வியடையும். போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 1000 மேற்பட்ட தனியார்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)