உச்சபட்ச வெப்பநிலையில் சென்னை
Posted: Mon,15 May 2017 02:58:16 GMT
அக்னி வெயில் வெப்பத்தால் தமிழகமே தகித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் இன்று பதிவாகியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வானிலை ஆராய்ச்சி மையம், “இன்று சென்னை நகரின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதிக்கு பிறகு, இன்றுதான் இவ்வளவு வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாள்களில் இதைவிட கடுமையான வெப்பம் பதிவாகும்.
சென்னையில், இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாள் இன்று. எனவே சென்னை மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். முக்கியமாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது” என்று தெரிவித்துள்ளது
  • Share
  • 0 Comment(s)