பங்குச்சந்தையில் எழுச்சி
Posted: Fri,05 May 2017 05:06:42 GMT
நீண்ட நாட்களுக்குப்பிறகு இந்திய பங்குச்சந்தையில் தொடர் ஏற்றம் காணப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் வங்கித்துறை பங்குகளின் விலை ஏற்றம்தான் காரணம்.
வங்கித்துறை பங்குகளின் ஏற்றம் காரணமாக நேற்று இந்திய பங்குச்சந்தை நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 30,000 புள்ளிகள் உயர்ந்தது. நிப்டி 9000 புள்ளிகள் உயர்ந்த நிலையில் இருந்தது.
5 மாநில தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றியை தொடர்ந்தே பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டு வருகிறது. மைக்ரோ பொருளாதாரம் போன்ற விசயங்கள் பங்குசந்தையின் தொடர்ச்சியான ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
  • Share
  • 0 Comment(s)