கத்திரி வெயில்: சில யோசனைகள்
Posted: Thu,04 May 2017 08:53:38 GMT
இன்று முதல் கத்திரி வெயில் ஆரம்பமாகியுள்ளது. மே 4 முதல் மே 28ம் தேதிவரை கத்திரி வெயில் தகிக்கும் என்பதால் இக்காலத்தில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும். ஒரு வேளை வெளியே செல்ல நேர்ந்தால் குடை அல்லது தொப்பி போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.
ஜீன்ஸ் போன்ற அடர்த்தியான ஆடைகள் அணிவதை தவிர்த்து மெல்லிய ஆடைகளை அணியவும்.
அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும். வெயிலால் ஏற்படும் நீர் குறைபாட்டை இது போக்கும்
ஐஸ்கிரீம், குளிர் பானங்கள் வெளிப்பார்வைக்கு குளிர்ச்சிசாயக தோன்றினாலும், அவைகள் உடல் வெப்பத்தை அதிகரிக்க கூடியவை எனவே ஐஸ்கிரீம் மற்றும் கார்பனேட்டேன் குளிர் பானங்களை தவிர்த்து, மோர், தயிர், கம்மங்கூல், இளநீர், நுங்கு, பதநீர், வெள்ளரி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
  • Share
  • 0 Comment(s)