வெண்பூசணியின் பயன்கள்
Posted: Wed,26 Apr 2017 05:14:55 GMT
கல்யாண பூசணி என்றும் சாம்பல் பூசணி என்றும் சொல்லப்படும் வெண்பூசணியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அமாவாசை, ஆயுத பூஜை நாட்களில் திருஷ்டி சுற்றி சாலைகளில் உடைத்து வீணாக்கப்படும் இந்தக்காயில் அளவிட முடியாத மருத்துவ குணங்கள் உள்ளன.
நரப்பு தளர்ச்சி உள்ளிட்ட நரம்பு சம்மந்தமான அனைத்து நோய்களையும் குணமாக்கவல்லது இந்த வெண்பூசணி.
வெண்பூசணி காயை தொடர்ந்து சமையலில் சேர்த்து வர வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் போன்ற உடற்சூடு சம்மந்தமான நோய்கள் நீங்கும்.
சிறுநீர் தொடர்பான நோய்கள் மற்றும் உடல்வலி ஆகியவற்றிக்கு அருமருந்தாக பயன்படுவது இந்த வெண்பூசணிக்காய்.
குடலில் உள்ள புழுக்களை வெளியேற்ற வெண்பூசணி சாறு பயன்படுகிறது. அத்துடன் ரத்தத்தை சுத்திகரிக்கவும், நெஞ்சுசளி, இருமல் போன்ற நோய்களை தடுக்கும் மருந்தாகவும் வெண்பூசணி சாறு செயல்படுகிறது.
  • Share
  • 0 Comment(s)