”விவசாய வருமானத்துக்கு வரி இல்லை”, அருண் ஜேட்லி விளக்கம்
Posted: Wed,26 Apr 2017 10:35:02 GMT
விவசாயத்தின் மூலம் வரும் வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்திருந்த நிலையில், அப்படி எந்த ஒரு திட்டமும் அரசுக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நிதி ஆயோக் பரிந்துரையை நான் முழுமையாக வாசித்தேன். அது தொடர்பாக எழுந்துள்ள குழப்பதை தீர்க்கும் வகையில் நான் ஒரு விவரத்தை கூற விரும்புகிறேன். வேளாண் துறை மூலம் கிடைக்கும் வருவாய்க்கு வரிவிதிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை,
மேலும், அரசியல்சாசனத்தின்படி வேளாண் வருவாய் மீது வரி விதிக்க மத்திய அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)