ஆற்றலை அதிகரிக்கும் அருகம்புல்
Posted: Tue,18 Apr 2017 12:55:14 GMT
முழு முதல் கடவுளான விநாயகருக்கு மிகவும் உகந்தது அருகம் புல். சுத்தமான இடங்களில் அதிகமாக வளரக்கூடியது இந்த அருகம்புல். புற்களின் ராஜா என்று அருகம்புல்லை அழைப்பார்கள்.
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேறூன்றி, முங்கில் போல் சுற்றம் சூழ வாழ வேண்டும் என்று வாழ்த்துவது இயல்பு. ஏனெறால் அவ்வளவு அதிகமாக வேர் பரப்பி செழித்து வளரக்கூடியது இந்த அருகம் புல்.
அருகம் புல் சாறு பல சத்துக்களை கொண்டுள்ளது, பல நோய்களை தீர்க்க வல்லது. குறிப்பாக கோடைகாலத்தில் ஏற்படும் உடற்சூடு சம்மந்தமான அனைத்து நோய்களையும் போக்கவல்லது அருகம்புல்.
அருகம் புல் சாறு அருந்திவந்தால், உடலில் சோர்வு என்பதே இருக்காது, வயதானவர்கள் தினமும் அருகம்புல் சாறை குடித்துவந்தால் வயோத்திகம் காரணமாக உடலில் ஏற்படும் சோர்வு நிலையை போக்கலாம்.
புற்றுநோய், இரத்த அழுத்தம், வயிற்ற்ப்புண், நீரிழிவு நோய், சளித்தொந்தரவுகள், தூக்கமின்னை, மலச்சிக்கல், உடற்சூடு, நீர்கடுப்பு உள்ளிட்ட நோய்களை திர்க்கவல்லது அருகம்புல் சாறு. காலை, வெறும் வயிற்றில் தினமும் 200 மில்லி அருகம்புல் சாறு குடித்துவர மேல்கண்ட நோய்கள் குணமடையும்.
  • Share
  • 0 Comment(s)