வேப்பம்பூவின் மருத்து குணங்கள்
Posted: Fri,14 Apr 2017 01:43:21 GMT
இயற்கை ஒவ்வொரு காலநிலையிலும் உயிரினங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களை தானாக உற்பத்தி செய்து கொடுக்கும். அப்படிப்பட்ட இயற்கையின் கொடைதான் வேப்பம்பூ.
கோடை காலத்தின் ஆரம்பத்தில் கண்களை கவரும் வண்ணம் வேப்பமர இலைகளே தெரியாத அளவுக்கு வேப்பமரம் முழுவதும் வேப்பம் பூக்கள் காணப்படும்.
இந்த வேப்பம்பூக்களை தேங்கயாயுடன் சேர்த்து துவையலாக செய்து சாப்பிடலாம் அல்லது ரசம் செய்து குடிக்கலாம் இதனால் குமட்டல், வாந்தி, மயக்கம் குணமாகும். குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்கள் அழிந்து நல்ல பசி உண்டாகும்.
வேப்பம் பூவை மூன்று மணி நேரம் நீரில் ஊற வைத்து குடித்தால் பித்தம் தீரும்.
வாயுத்தொல்லை, புளி ஏப்பம், பசியின்மை போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம் பூக்களை மென்று தின்றால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • Share
  • 0 Comment(s)